There's an obvious inconsistency here. Is it June or July for aphelion and is it December or January for perihelion ? I believe it is early July and early January respectively but I'm relying on other internet sites for that.


தமிழில்:

(perihelion) பெரிகெலியன் என்பது சூரியனை சுற்றி வரும் கோள்களின் நீள் வட்ட பாதையில் மிக அருகாமையான புள்ளி(பகுதி) ஆகும். பெரிகெலியன் என்ற வார்த்தை, பெரி (அருகில் என்ற பொருள்) மற்றும் கெலியோசு ( சூரியன் என்ற பொருள்) என்ற கிரேக்க வார்த்தைகளின் இனைப்பு ஆகும்.

வளிமண்டலத்தில் , கோள்களும், வால் நட்சத்திரங்களும் சூரியனை நீள் வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. அத்தகைய நீள் வட்ட பாதையில் சூரியனுக்கு மிக அருகிய பகுதி - பெரிகெலியன் என்றும், மிக தொலைவான பகுதி அப்கெலியன் என்றும் அழைக்கப்படுகிறது.

உத்தேசமாக, சூரியனிடமிருந்து பூமி மிகவும் தொலைவில் வருவது சூலை-4 ஆகும். அப்போது சூரியனிலிருந்து பூமியின் தொலைவு 150 மில்லியன் கி.மீ. ஆகும்.

உத்தேசமாக, சூரியனுக்கு பூமி மிக அருகில் வருவது சனவரி-3. அப்போது சூரியனிலிருந்து பூமியின் தொலைவு 146 மில்லியன் கி.மீ.ஆகும். அப்போது பூமியின் வடக்கு பகுதியில் குளிர் காலமாகவும், பூமியின் தென் பகுதியில் கோடை காலமாகவும் இருக்கும்.

எனவே , சூரியனிலிருந்து பூமியின் தொலைவு பூமியில் பருவ மாற்றங்களை உண்டு பன்னுவதில்லை. காரணம் பூமி, 23,1/2 கோணம் சாய்ந்த நிலையில் தன்னையே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருவகிறது. ஆக, சூரிய ஒளியின் நேரடி தாக்கம், பூமியின் சாய்ந்த நிலையுமே, பருவ மாற்றத்திற்கு காரணம்.

சூரிய ஒளியின் நேரடி தாக்கம் பூமியின் மீது அதிகமாக இருக்கும் போது கோடை காலமாகவும், சூரிய ஒளியின் நேரடி தாக்கம் பூமியின் மீது குறைவாக இருக்கும் போது குளிர் காலமாகவும் இருக்கும்.

Return to "Perihelion" page.