பெருந்தோட்ட உறவுகளுக்கான இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்தில் தவறான முறையில் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக இணைக்க சில தொழிற்சங்க மற்றும் அரசியல் வற்புறுத்தலில் சில மலையகதலைமைகள். உடனே தடுத்து நிறுத்துமாறும் தொழிற்சங்க அரசியல் பேதங்கள் உள்வாங்கப்படாது அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இந்திய அரசின் வீடமைப்பு கிடைக்க வழிக்கோருமாறும் புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் முரளிரகுநாதன் கொழும்பு இந்திய உயர்ஸ்தாணிகரிடம் வேண்டுகோள். பெருந்தோட்ட உறவுகளுக்கான இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்தில் தவறான முறையில் தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக இணைக்க சில தொழிற்சங்க மற்றும் அரசியல் வற்புறுத்தலில் சில மலையகதலைமைகள். உடனே தடுத்து நிறுத்துமாறும் தொழிற்சங்க அரசியல் பேதங்கள் உள்வாங்கப்படாது அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் இந்திய அரசின் வீடமைப்பு கிடைக்க வழிக்கோருமாறும் புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் முரளிரகுநாதன் கொழும்பு இந்திய உயர்ஸ்தாணிகரிடம் வேண்டுகோள் ஒன்றை முன் வைத்துள்ளதாகவும் இந்த வேண்டுகோள் இந்திய உயர்ஸ்தாணிக முதலாவது செயலர் திரு டி.சி. மன்ஜுநாத் அவர்களிடம் கையளிக்கப்பட்டதாகவும் அதன்போது இந்திய உயர்ஸ்தாணி காரியாளய மலையக அபிவிருத்திக்கு பொருப்பான இரண்டாவது செயளர் திரு டாக்டர் சிவகுரு உடன் இருந்ததாகவும் புதிய தொழிலாளர் முன்னணியின் ஊடகப்பிரிவு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது. மேலும் இது சம்பந்தமான விரிவான விளக்கங்களை புதிய தொழிலாளர் முன்னணியின் தலைவர் முரளிரகுநாதன் இந்திய உயர்ஸ்தாணிகரிடம் தெறிவித்துள்ளதாவது. நன்கொடையாக கிடைக்கப்பெற்ற இந்திய அரசின் வீடமைப்புத்திட்டம் பெருந்தோட்ட உறவுகளுக்காக வழங்கப்பட்டதே தவிர மலையகத்தில் பதியப்பட்ட எந்த ஒரு தொழிற்சங்கத்திற்கும் அல்ல. மாறாக இந்தியாவின் இந்த வீடமைப்புத்திட்டத்தில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கோ, அல்லது எந்த ஒரு தொழிற்சங்கத்திற்கோ தன்னுடைய சுயல் நலம் கருதி செயல்படமுடியாது. இவ்வாறு இருக்கையில் இந்த திட்டத்தை தனது சுயநலத்திற்காக ஒரு சில மலையக தலைமைகள் தான் தோற்றித்தனமாக தனது தொழிற்சங்க அங்கத்திணர்களுக்கு மாத்திரம் தான் இந்திய வீடமைப்புக்கான திட்டம் கிடைக்கும் என கூறிவருவதை புதிய தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிப்பதாகவும் , இதற்கு எதிராக செயல்படுமாறும், எந்த பாரபட்சமின்றி தேவையான அனைத்து பெருந்தோட்ட தொழிலாள உறவுகளுக்கும் இந்த வீடமைப்பை செயல்படுத்துமாறு , இந்திய உயர்ஸ்தாணிகரிடம் கோரியுள்ளதாக, புதிய தொழிலாளர் முன்னணியின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சம்பந்தமாக இந்திய உயர்ஸ்தாணி காரியாளய முதலாவது செயலர் திரு டி.சி. மன்ஜுநாத் அவர்களும்., இந்திய உயர்ஸ்தாணி காரியாளய மலையக அபிவிருத்திக்கு பொருப்பான இரண்டாவது செயளர் திரு டாக்டர் சிவகுரு அவர்களும் ., இந்த பிரச்சினை சம்பந்தமாக உடனடியாக இந்திய உயர்ஸ்தாணிகரிடம் தெரிவித்து., நடவடிக்கை எடுப்பதாகவும் முரளி ரகுநாதன் அவர்களிடம் உறுதி அளித்ததாக அந்த புதிய தொழிலாளர் முன்னணியின் ஊடகப்பிரிவின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.